ஒவ்வொரு கணணி பொறியின்
இயக்கத்துக்கு அடிப்படை அத்தியாவசியமான மென்பொருள் operating
system ஆகும் . இதனை அடிப்படையாக
கொண்டே கணணி பொறி ஒன்று உங்களின் நாளாந்த
கணணி பொறியுடனானா செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். உதாரணமாக Mp3 பாடல் கேட்க , MS paint இல் சித்திரம் வரைய தேவையான மென்பொருட்களை தனது
கண்காணிப்பில் செயற்படுத்துவது operating
system ஆகும் . அதாவது
ப்ரோக்ராம்ஸ் (Computer Programs ) எனப்படும் இவைகளின் வித்தியாசமான process களை செயற்படுத்துவதே Operating
System இன்
முக்கிய வேலையாகும்.
கணணியை Switch On செய்யும் பொழுது கணனியின்
ROM (Read only memory) பிரிவில்
நிரந்தரமாக சேமிக்க பட்டிருக்கும் ஒரு ப்ரோக்ராம் (Program) மூலமாக ஒபெரடிங் சிஸ்டம் தன்னியக்க ஆரம்பத்தை
பெற்று கொள்ளும். பின்னர் ஒபெரடிங் சிஸ்டம் கணனியின் தலைமை அதிகாரி போல செயற்பட்டு
Resource
allocation , Memory management , Process scheduling , Error handling போன்ற செயற்பாடுகளை திறம் பட செய்வதன் மூலமாக
கணணியை தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும்.
ஒபெரடிங் சிஸ்டம் (Operating System) ஒன்று தன்னுடைய செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொழுது இரு
வேறு வகையான யுக்திகளை கையாளுகின்றது .
1. Multi programming
system.
2. Multi tasking system.