Community project by students of the Faculty of Information Technology, University of Moratuwa, Sri Lanka.

Friday, December 6, 2013

1.2 தரவுகளையும் தகவலையும் உருவாக்கவும் பரப்பவும் மற்றும் நிருவகிக்கவும் தேவையான தொழில்நுட்பத்தை ஆய்வோம்(The need of technology to create, disseminate and manage data and information)


மனிதர்களாகிய நாம் தரவுகளையும் தகவல்களையும் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றோம். அதனை உருவாக்கவும், பரப்பவும் மற்றும் அதை நிருவகிக்கவும் நம் முன்னோர்கள் பல யுத்திகளை கையாண்டுள்ளனர்.

பெருந்தொகையான தரவுகளையும் தகவல்களையும் கையினால் கையாளும் முறைகளில் ஏற்படும் குறைபாடுகள்.


முன்னைய காலத்தில் தரவுகளைக் கையாள்வது மிக இலகுவான காரியமாக இருந்தது. ஏனெனில் அக்காலத்தில் தரவுகளினதும் தகவல்களினதும் அளவு மிகச் சிறியது. காலப்போக்கில் சேகரிக்க வேண்டிய தகவல்களின் அளவு  அதிகரிக்க அதிகரிக்க அத் தரவுகளை கையாளும் திறன் குறைந்து வந்தது. 
அத்துடன் அவற்றை சேகரிக்கும் வேகம்(Slowness)  அவற்றின் நம்பகத்தன்மை(Unreliability), மிகச்சரியின்மை(Inaccuracy) குறைந்து வந்தது. அத்துடன் அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பும் போது அவை தவறுவதற்கான வாய்ப்பும் அதிகம் காணப்பட்டது. தகவல்கள் அதிகமாகையால் அவற்றின் உண்மைத்தன்மையும் குறைவாகவே காணப்பட்டது.


IT யுகத்தின் தோற்றம்

தரவுகளையும், தகவல்களையும் சேமிப்பதிலும் பரிமாற்றம் செய்வதிலும் சிக்கல்கள் காணப்பட்டதால் மனிதன் தனது அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி அதற்கான தீர்வை கண்டுபிடிக்க முனைந்தான். அதற்காக இயந்திரங்களை கண்டு பிடித்தான். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதே கணினி ஆகும். இதற்கான கொள்கைகளை  Charles Babbage வெளியிட்டு பின்னர் 1837ல் முதல் கணினி இயந்திரத்தையும் கண்டு பிடித்தார். இதுவே தகவல் தொழில்நுட்பத்தின் ஆரம்ப காலம் ஆகும். கணினியின் கண்டுபிடிப்புக்கு பின் தகவல்ககளை சேமித்தலும் பரிமாறலும் இலகுவாக்கப்பட்டது.


அதன் பின் அமெரிக்க புள்ளிவிபரவியலாளர் ஹெர்மன் ஹோலேறித்(Herman Hollerith) மக்கள் தொகை கணக்கெடுக்கும் அலுவலகத்துக்காக Punch cardsஐ அடிப்படையாக கொண்ட அட்டவணைப்படுத்தும் இயந்திரம் ஒன்றை 1890ல்  கண்டுபிடித்தார். இது தகவல் சேமிப்பினை பன்மடங்கு வேகப்படுத்தியது. இவர் நிறுவிய Tabulating Machine Company காலப்போக்கில் IBM என பெயர் மாற்றப்பட்டது.

 Tabulating Machine

நாம் நாளாந்த வாழ்வில் பல்வேறுபட்ட தகவல்களை கையாள்கிறோம். அவற்றின் முக்கியத்துவத்தைப் பொறுத்து வெவ்வேறுபட்ட சேமிப்பகங்களில்(Storage) சேமிக்கின்றோம். ஆரம்பத்தில் Magnetic Tapeல் தரவுகளை சேமித்தோம். அதன் வினைத்திறன் பற்றாக்குறையினால் அதன்பின் வன்தட்டு(Hard disk), Floppy disk, இறுவெட்டு(CD), DVD, Micro SD card, Pen drive என வினைத்திறனுள்ள பல சேமிப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று அதன் உச்ச கட்டமாக Cloud storage பயன்பட்டு வருகின்றது. இவற்றின் மூலம் நாம் தகவல்களை பாதுகாப்பாகவும், வினைத்திறனுடனும் சேமிக்கலாம்.
Storage devices

கணினியின் வரலாறானது பாரிய தொழில்நுட்ப வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டது. முதல் தலைமுறையின் போது வெற்றுக் குழாய்கள்(Vacume tubes) பயன்படுத்தப்பட்டது. இந்தக் கணினியை வைத்திருப்பதற்கு ஒரு அறை முழுவதும் தேவைப்பட்டது. அத்துடன் அதைக் கையாள்வதும் அவற்றைப் பராமரிப்பதும் மிகக் கடினமாகக் காணப்பட்டது. அதன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட Transistor, Integrated Circuit, Micro processorகளால் அவற்றின் அளவு குறைந்து வந்து இன்று எம் உள்ளங்கையில் அடங்கிவிட்டது. இன்று நம் கையடக்க தொலைபேசிகளிலேயே தகவல்களையும், தரவுகளையும் சேமிக்கவும் அவற்றைப் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது. முன்னொரு காலத்தில் செல்வந்தர்களாலும், அலுவலகங்களிலும் மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்த இச் சாதனங்கள் இன்று சாதாரண மனிதனாலும் உபயோகிக்கப்படுவது தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைத்த அநுகூலமே ஆகும்.
First generation computer


தகவல் தொழில்நுட்பவியலையும் தொடர்பாடல் தொழில்நுட்பவியலையும் இணைதல்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1957 காலப்பகுதியில் தகவல் பரிமாற்றத்திலும் சேமிப்பிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்னர் கணினியானது ஒரு நேரத்தில் ஒரு வேலையே மட்டுமே செய்ய கூடியதாக  இருந்தது. இது Batch Processing எனப்பட்டது. இது அக் காலத்தில் வினைத்திறனாக இருந்தது. பின்னர் காலப்போக்கில் கணினியின் தேவைகள் அதிகரிக்க வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட வேலையின் பகுதிகளை செய்ய வேண்டியிருந்தது. அதன் போது ஒரு இடத்தில செய்யப் பட்ட வேலை கைகளால் மற்றைய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சரிபார்த்து இணைக்கப்பட்டது. இது உருவாக்குனர்களுக்கு(Developers) மிகவும் கடினமானதாகவும், நேரத்தை வீணாக்கும் செயலாகவும் இருந்தது. 1957ல் பாரிய தொழில்நுட்ப மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஒரு இடத்தில் இருந்தே இன்னொரு இடத்தில் இருக்கும் கணினியை இயக்கக்கூடியதாக இருந்தது(Remote Connection). அதேவேளை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடியதாகவும் இருந்தது(Time sharing).

1957ல் சோவியத் யூனியனால் Sputnik விண்கலம் ஏவப்பட்டது. அதற்குப் போட்டியாகவும் அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவும் அமெரிக்கா ARPA(Advance Research Projects Agency)ஐ உருவாக்கியது. அந்த நேரத்தில் தகவல்கள் மக்களினால் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. பிற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் தகவல்களை பரப்ப இணையம் பயன்பட்டது. இன்றைய இணையத்தின் வளர்ச்சிக்கு விஞ்ஞான(Scientific), இராணுவ(Military), மற்றும் வர்த்தக(Commercial) தேவைகளே அடிப்படையாகக் காணப்பட்டது. அதன் பின் 1960களில் ARPAnet உருவாக்கம் பெற்றது. இதுவே உலகின் முதல் Multiple-site computer network ஆகும். இதுவே இறுதியில் Internet ஆக மாறியது.

தகவல் பரிமாற்றத்தின் போது இரு கணினிகளுக்கிடையே TCP(Transmission Control Protocol)  எனும் நெறிமுறை(Protocol) பயன்படும். இது தகவல் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தும். இதன் போது தகவலானது சிறு சிறு துண்டுகளாக(Packets) பிரிக்கப்பட்டு அனுப்புனரினால்(Sender) அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பப்பட்ட சிறு சிறு துண்டுகள் பெறுனரினால்(Reciever) பெறப்பட்டு ஒன்று சேர்க்கப்படும். இதுவே Packet Switching எனப்படும். இப்படி Packets ஆக அனுப்புவதால் தகவல்கள் தவறவிடப்படும் வாய்ப்பு குறைவு.

தகவல் பரிமாற்றத்தின் போது ஊடகம் முக்கியமானதாகும். அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை கம்பி ஊடகத்தினால்(Wire medium) அனுப்பப்படும் தகவலே வேகமாகவும் வினைத்திறனுடனும் சென்றடையும். கம்பியில்லா ஊடகத்தினால்(Wireless medium) அனுப்பப்படும் தகவல் தவற விடப்படும் வீதம் அதிகமாகும். அத்துடன் குறுகிய தூரத்துக்கு மட்டுமே வினைத்திறனுடன் அனுப்பலாம். தூர பிரதேசங்களுக்கு அனுப்புவது கடினமாகும். Radio waves மூலம் தகவல்கள் அனுப்பப்படும் போது வளிமண்டல தாக்கங்களினால் தகவல் அனுப்புவதில் சிரமம் காணப்பட்டது. ஆகவே சிறிய சிறிய Network குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தகவல் அனுப்புதல் இலகுவானது.

Connecting Computers through Wire and Wireless medium

WWW ( World Wide Web) என்பது இணையம் மூலமாக தகவல்களை அணுகும் வழிமுறை ஆகும். இணையமானது HTTP நெறிமுறையை(Protocol) உபயோகிக்கிறது. இதுவே இணையத்தில் தகவல் பரிமாறப் பயன்படும் மொழி(language) ஆகும். இணையப் பக்கங்களைப்(Web pages)ஐ பார்வையிடுவதற்காக Internet Browsers பயன்படும். இன்று Google Chrome, Firefox போன்ற Browsers அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இணையத்தளத்தில் Graphics, Sounds, Text, Video போன்ற உள்ளடக்கங்கள் காணப்படும். முன்னொரு காலத்தில் கணினியில் மட்டுமே காணப்பட்ட இணைய பாவனை இன்று கையடக்கத் தொலைபேசி(phone), Tablet , Palmtop போன்ற உபகரணங்களிலும் காணப்படுகிறது. இத் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகின் எப் பாகத்திலிருந்தும் தகவல்களை அனுப்பவோ பெற்றுக்கொள்ளவோ முடியும். 
Web browsers


3 comments

Thursday, November 28, 2013

1.1.1 தகவல்களின் அடிப்படைக் கட்டமைப்பு (Basic Building Blocks of Information)

தரவு – அறிமுகம் (Introduction to Data)

இலங்கையில் ஒவ்வொரு 10 வருடத்திற்கும் ஒருமுறை குடிசனமதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது. குடிசனமதிப்பீட்டாளர் ஒருவர் ஒவ்வோர் இல்லங்களுக்கும் சென்று பின்வரும் தரவுகளை சேகரிப்பார். குடும்பத் தலைவரின் பெயர், குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை, அங்கத்தவர் பெயர், பால், வயது அத்துடன் மேலும் பலதரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவையே அடிப்படை தரவுகள் ஆகும். இவற்றுள் வீட்டு இலக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கீழுள்ளஅட்டவணை, 2011 இலங்கை குடிசனமதிப்பீடு தொடர்பான தரவுகளை சேமிப்பதற்கு தயாரிக்கப்பட்ட படிவமாகும். மக்களிடம் இருந்து பல்வேறுபட்ட தரவுகள் இப்படிவம் மூலம் சேகரிக்கப்படுகின்றன.



பின்னர் அத்தரவுகள் கீழுள்ளவாறு தொகுக்கப்படுகின்றன. பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகள் தேவைப்படும் செயன்முறைக்கு ஏற்ப குறித்தவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலே காட்டப்பட்டுள்ள படிவத்துக்கும், கீழுள்ளதொகுப்புக்கும் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஆனால் மேலுள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டே கீழுள்ள தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது.


(பூரண புள்ளிவிபரவியல்:

ஒரு நாட்டின் சனத்தொகை அடர்த்திவீதம், பிறப்புஇறப்புவீதம் என்பவற்றை பல்வேறு விதங்களில் ஒப்பிடுவதற்கு மேற்குறிப்பிடப்பட்ட தரவுகள் உறுதுணையாக அமைகின்றது. இத்தரவுகளைக் கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், பல்வேறுபட்ட தீர்மானங்களை எடுப்பதற்கும் இலகுவானதாக அமைகின்றது. மேலும் இதனூடாக எடுக்கப்படும் முடிவுகள், தீர்மானங்கள் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றுகின்றது.


தரவுகள் மேலுள்ளவாறு மட்டுமன்றி சாதாரணமாக எல்லா மட்டத்திலுமான மக்கள் மத்தியிலும் பயன்படுத்தப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் குடும்பஅங்கத்தவர் எண்ணிக்கையை அறிந்து வைத்திருப்பது முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இலகுவாக வழிவகுக்கின்றது. உதாரணமாக வீட்டில் அம்மா சமைக்கும்போது, வீட்டு அங்கத்தவர்களின் எண்ணிக்கை, விருப்புவெறுப்பு தொடர்பான தரவுகளின் அடிப்படையில், உணவை ஆக்குவார். இவ்வாறு எளிமையாக தரவு என்பதனை விளங்கிக்கொள்ளமுடியும்.


தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கைநெறியினை கற்கும் எங்களை போன்ற சகோதர, சகோதரிகள் மேற்குறிப்பிடப்பட்ட தரவுகள் சார்பாக பின்வரும் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.

  • சேகரிக்கபட்ட படிவங்களில் மாற்றம் எதனையும் ஏற்படுத்தாது கொடுக்கப்பட்ட தரவுகளை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கலாமா?


  • இரு வீடுகளை மட்டும் ஒப்பிடுவதற்கு, இரு வலையங்களை மட்டும் ஒப்பிடுவதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுருக்கமான தரவுக்கோவையை பயன்படுத்தலாமா?

  • எதற்காக இந்த படிவங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரேமாதிரியான வகையில் முக்கியத்துவம் பெறாமல் ஒவ்வொருவருக்கும் வேறுப்பட்ட வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது?


காரணம் என்னவெனில் தரவுகள் வெவ்வேறு வகையாக உள்ளன.

தற்போது நாங்கள் தரவுகளின் வரைவிலக்கணத்தை ஆராய்ந்து பார்ப்போம்.


அர்த்தமின்மை(Meaningless)

அர்த்தமின்மை என்று கூறப்படுவது தரவுகளில் மாற்றம் ஏற்படுத்தாது தற்போது உள்ளவாறு பயன்படுத்தப்படுத்தும் வேளையில் பயன்படுத்துபவரின் நோக்கத்தை பூரணப்படுத்த முடியாமல் போவதாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அர்த்தமற்ற தரவுகளை அர்த்தமுள்ள தரவுகளாக மாற்றுவது அவசியமானதாக அமைகிறது. சனத்தொகை கணிப்பீட்டின் உதாரணத்தை நோக்கினோமானால் சனத்தொகைக் கணிப்பீடு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், முடிவுகளை முன்வைத்தல் போன்றவற்றிற்கு வீடுகளிற்கு சென்று சேகரிக்கப்பட்ட தரவுகளின் மூலம் நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளுதல் சாத்தியமற்றதாகின்றது.

அவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவது சேகரிக்கபட்ட தரவுகளை அர்த்தமுள்ள விதத்தில் பயன்படுத்தாமையே ஆகும். ஆகவே தரவுகளை சேகரிப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தாது அவற்றை அர்த்தமுள்ள விதத்தில் பயன்படுத்துவதிலும்  கவனம் செலுத்துதல்  முக்கியமானதாகும்.


ஒழுங்கமைப்பின்மை(Not organized)

தரவுகளில் இருந்து பயனுள்ள விடயங்களை பெற்றுக்கொள்வதற்கு தரவுகளை வேறொரு வடிவில் மாற்றுவது பெரும்பாலும் அவசியமாகும். இலங்கையில் உள்ள எல்லோரினதும் வயதை அறிந்துகொள்ள வேண்டுமானால் எல்லா வீடுகளிலும், வீட்டு அங்கத்தவர்களின் பெயர் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை குறித்துக் கொள்ளல் அவசியமாகின்றது. தரவுகளை ஒழுங்குபடுத்துவதற்கு பெரும்பாலும் புள்ளிவிபரவியலின் மூலம் ஒழுங்குபடுத்தும் செயன்முறையினை கையாளல் இலகுவானதா என்பது தற்போது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும்.


முறைசாரா( Informal )

தரவுகள் அமைந்திருப்பதற்கேற்ப அத்தரவுகளை வகுப்பதில் ஈடுபடுபவர் முறையற்றவிதத்தில் அவற்றினை வகுக்கமுடியும். தரவுகளை சேகரிக்கும் போது சில முக்கிய அடிப்படை தரவுகள் பூரணமற்றதாக அமையலாம். சில வயோதிபர்களின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை பெற்றுக்கொள்ள இயலாமை இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பதிவேடுகளில் காணவேண்டிய சில முக்கியமான தரவுகள் பூரணமில்லாது காணப்படும்.
கணக்கெடுப்பு மற்றும் மதிப்பிடல் பிரிவு மேலே குறிப்பிட்டவாறு அமைந்துள்ள பதிவேடுகளை நிராகரிக்கும் தறுவாயில் கணக்கெடுப்பு பிரதிநிதி வேறுபட்ட ஏடுகளை தயாரித்துக்கொடுக்க முடியும். இதன்போது பதிவேடுகளின் முறையற்றதன்மை (informality) அதிகரிக்கும்.



தரவுகளின்வகைகள்
தரவுகளின் வகைகளை கருதினோமானால் 3 வகையான தரவுகள் காணப்படுகின்றன.

எழுத்து(Text )

தரவுகளை சேகரிக்கும் பொழுது பிரதான வழியாக எழுத்து மூலம் குறித்துக்கொள்ள முடியும்.எழுதக்கூடிய எந்தவொரு நபருக்கும் தரவுத் தாளில், அல்லது கையடக்கத் தொலைபேசியில் எழுத்துக்களை குறித்துக்கொள்ள முடியும்.
நபர் ஒருவருக்கு அன்றாடம் அவசியமாக கருதப்படக்கூடிய தொலைபேசி இலக்கங்கள், பயணம் செய்த இடங்கள், அவற்றுக்கிடையேயான தூரம், வங்கிக் கணக்கு இலக்கங்கள் மற்றும் தேவையான பல விடயங்களை எழுத்து மூலம் குறித்துவைத்துக் கொள்ள முடியும். விளங்கிக் கொள்ளமுடியாத முறையில் இரகசிய அடையாளங்களினூடகவும் எழுத்து மூலம் குறித்து வைத்துக்கொள்ள முடியும்.

தரவு சேகரிக்கும் போது கண்காணிப்பு (observation) அல்லது வினாக்கள் வினாவுதல் (questioning) அல்லது தரவு சேகரிக்கும் விசேட உபரணம் இவற்றின் மூலம் குறித்துக்கொள்ள முடியும். உதாரணமாக கோணமானி அல்லது வட்டாரியை பயன்படுத்த முடியும்.



கணினி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் தரவு முகாமைத்துவத்திற்கு கோப்பிடல் முறைமை (File System) பயன்படுத்தப்பட்டது.

அவ்வாறு கோப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தரவுகளை, தன்னியக்கமற்ற (Manual) முறை மூலமோ, ஒளியியல் அடையாள உணரி (Optical mark recognition – OMR) மூலமோ அல்லது ஒளியியல் எழுத்துரு உணரி (Optical character recognition – OCR) மூலமாகவோ கணினியில் பதிவுசெய்ய  (Feed) முடியும். 


ஒலி(Audio ) 

ஒலிவாங்கி (Microphone) தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததன் பின்னர்,  தொடர்ச்சியான (Continuous) ஒலிஅலைகளை மின்அலைகளாக (electrical signal) மாற்ற (Convert) முடிந்தது.

கணினி மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பின்னர், இந்த மின்அலைகள் (electrical signal), கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய அடி இரண்டு (Binary) க்கு மாற்றப்பட்டு கணினியில் பதியக் (Feed) கூடியதாக இருந்தது.

இந்த செயற்பாட்டை விபரமாக தகவல் தொடர்பாடல் புத்தகத்தின் அத்தியாயம் 8 இல் அறியலாம்.

இங்கே ஒலிவாங்கியை (Microphone) தேவைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த முடியும். உதாரணமாக இசைவல்லுனர்கள் குரல் பதிவு ஒலிவாங்கி (vocal recording microphone) யை பயன்படுத்துகின்றனர். அதே வேளை இரகசிய பரிவர்த்தனை செயற்பாட்டுக்காக ஒலிவாங்கியும் (Microphone) பயன்படுத்தப்படுகின்றது.


இவ் ஒலி அலைகளை கணினியினுள் பதித்த பின்னர், அதில் உள்ள தவறுகளை நீக்கி, செம்மையாக்கி பயன்படுத்தமுடியும்.

காணொளி (Video ) 


காணொளி அலையை கணினியில் திறம்பட பதித்த பின்னர், கண்ணால் பார்த்து உருவங்களை அடையாளப்படுத்த முடியும். இதற்கு எண்ணியல் கமெரா (Digital Camera) பயன்படுத்தப்படுகின்றது. இவ் எண்ணியல் கமெரா (Digital Camera) வின் உள்ளே தரவானது அடி இரண்டு (Binary) முறையில் சேகரித்து வைக்கப்படும்.

உண்மையில் வீடியோவை, வரிசையாக உள்ள அசையாத நிழற்படங்களாக கருதமுடியும். இப் படங்கள், சிறு சதுரங்களாக (Pixel) பிரித்தறியப்பட்டு, கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய  அடி இரண்டு (Binary) வடிவில் மாற்றப்படும்.

சிறிய கமெராவில் இருந்து, தொழில்நுட்பம் மிக்க உணரிகள் (Sensors) கொண்ட கமெராக்கள் வரை இவ் எண்ணியல் கமெரா (Digital Camera) உதவியாக உள்ளது.
1 comment

Thursday, November 21, 2013

பக்கங்களையும் உள்ளடக்கத்தையும் வடிவமைக்க வலைதளங்களின் கட்டமைப்பும்சேர்மானமும் (The structure and the composition of websites to organize pages and content)

பக்கங்களையும் உள்ளடக்கத்தையும் வடிவமைக்க வலைதளங்களின் கட்டமைப்பும்சேர்மானமும்

(The structure and the composition of websites to organize pages and content)

இந்த பதிவானது முக்கியமாகமுகப்புபக்கம் (Home page), இணைப்புபக்கங்கள் (Link pages), உரைகள் (Texts), கிராபிக்ஸ் (Graphics), ஆடியோ (Audio), காட்சியமைப்புகள் (Visuals)மற்றும்ஹைபர்லிங்க்ஸ்(Hyperlinks)ஆகியவற்றை பயன்படுத்தி இணையத்தளம் ஒன்றின் வடிவமைப்பை பற்றி விளக்குவதாக அமையும்

முகப்புபக்கம் (Home Page)
ஒரு வலைத்தளத்தில் முகப்புபக்கமே முதல் முதலாக காட்சிபடுத்தப்படும் ஒரு அம்சமாக அமையும். ஒரு முகப்புபக்கத்தை நாம் குறியீட்டுபக்கம்
முன்பக்கம் மற்றும் முதன்மைபக்கம் எனவும் வேறு பெயர்கள் கொண்டு அழைக்கலாம்கீழே ஒரு முகப்புபக்கத்திற்கான உதாரணம் காட்டபட்டுள்ளது.வாடிக்கையாளர் ஒருவர் இப்படியான ஒரு முகப்பு புத்தகத்தை பார்ப்பதன் மூலம் குறித்த இணைத்தள உரிமை நிறுவனத்தின் தயாரிப்பு அல்லது சேவையை பற்றி அறிந்துகொள்ளலாம் என்பதால் அந்த வலைத்தளத்தின் மிகமுக்கியமான பகுதியாக இது கருத்தப்படுகின்றது . பின்வரும் முறைகளின் இது மூலம் மேலும் விளக்கபடுகின்றது :

1.வணிகம் அல்லது ஒரு நிறுவனத்தை அறிமுகப்படுதுவதட்கும் அதன் நோக்கங்களை தெரிவிப்பதற்கும் உதவுகின்றது.
2. வழங்கப்படும் சேவை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பெற இது உதவுகின்றது.

3. தயாரிப்புகள்,தகவல்,விளம்பரம்கொடுக்க இது உதவுகின்றது.


இணைப்புபக்கங்கள் (Link Pages)
முகப்புபக்கம் ஏனைய பக்கங்களுக்கு செல்ல நாம் இணைப்பு பக்கங்களை பயன்படுத்துகிறோம்.இவை இணைய தளம் ஒன்றில் நியமத்துக்குரிய (Standard) ஒரு அமைப்பாகும். ஒருவலைத்தளத்தில் மேலதிக தகவல்கள் இந்த இணைப்புபக்கங்கள் மூலம் கிடைக்கின்றன. இத்தகைய இணைப்பைஉருவாக்க, "உள்ளகஇணைப்புகள்" பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு, அதே இணையபக்கங்களின் இடைஇடையே இணைப்புகளை உருவாக்கவேண்டும். இதனால் நாம் :

1. பக்கங்களை எளிதில் நகர்த்தலாம்
2.குறிப்பிட்ட ஒரு அடிப்படை ஒழுங்கமைப்பில் இணையத்தளத்தை வடிவமைக்கலாம்.

Ø <a href="url"> Link text </a>என்பதுஇணைப்புக்குபயன்படும் குறிப்பீடாகும்.
இணைய வலைத்தளத்தில் இரண்டுமுக்கியவகைகள்உள்ளன.
அவையாவன :
1. நிலையானபக்கங்கள். (Static pages)
2. அசைவுள்ளபக்கங்கள். (Dynamic pages)
நிலையானபக்கங்கள். (Static pages)
ஒரு வலைத்தளத்தை ஒரு தேடு பொறிகோரும்போது, WebServer இல் இருந்து அது பதிவிறக்கம் செய்யப்பட்டு Web browser  இல் அது  நிலைப்படுத்தபட்டிருக்கும். இத்தகைய பக்கங்கள் உருவாக்கஎளிய HTML குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.பக்கங்களின் உள்ளடக்கங்களை மாற்ற வேண்டுமெனில் இணையத்தள வடிவமைப்பாளர் WebServer இல் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.
நன்மைகள்
1. புதிய மாற்றங்கள் எளிதாகஏற்படுத்தலாம்.
2. பக்கங்களை உருவாக்கதேவையான (Size)அளவுசிறியதாகஉள்ளது.
3. வழங்கிஅளவு(Web Hosting space)சிறியதாகஉள்ளது.

தீமைகள்
1. பழைய தகவல் கொண்டிருக்கலாம்.
2. மேலும் தகவல் பெற அல்லது கருத்துரை வழங்க தொலைபேசி, பின்னூட்டல்(Feed backs)போன்ற மற்ற முறைகளை பயன்படுத்த வேண்டும்.

ஒருஇணையத்தளம்உருவாக்கதேவையானஅடிப்படைகூறுகள்
1. எழுத்துக்கள்
2. வரைகலை
3. ஒலிவடிவம்
4. காட்சியமைப்புகள்
5. மிகைஇணைப்பு(Hyper Links)

எழுத்துக்கள்
பாவனையாளருக்கு இணையத்தளத்தில் உள்ள தகவல்களை வழங்க எழுத்துக்கள் மூலகருவி ஆகும். எழுத்துக்களை பாவிக்கும்பொழுது ஒருவர் ஏற்புடைய எழுத்து வகையை பயன்படுத்த தெரியவேண்டும். ஏனெனில்அதுவே விளக்கமாகவும் கவர்ச்சியாகவும் பாவனையாளருக்கு இருக்கும்.இணையத்தளங்களை உருவாக்கும் பொழுது நாம் இணையபாதுகாப்பு எழுத்துவகைகளை பயன்படுத்தவேண்டும். அவ்வகையான எழுத்துவகைகளே எல்லா கணினி இயக்க அமைப்புகளுக்கும், வலைதேடல் தளங்களுக்கும் ஏற்புடையதாக  அமையும்.


சிலஇணையபாதுகாப்பு (Web Safe Fonts)எழுத்துவகைகள் :
 1.Arial/Helvectica                                                                    
 2. Times New Roman/ Times
 3. Courier New/ Courier
 4. Verdana
 5. Georgia
 6. Comic Sans
 7. Trebuchet MS
 8. Tahoma
 9. Arial Black





கிராபிக்ஸ்ஆடியோமற்றும்காட்சிகள்
ஒருவலைத்தளத்தில்கிராபிக்ஸ், ஆடியோ மற்றும் காட்சிகளை பயன்படுத்தி ஒரு எளிதான முறையில் தகவலை தெரிவிக்கலாம். மேலும் இவை பயனாளர்களுக்கு இலகு முறையில் விடயங்களை புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது.
பின்வரும் அட்டவணையில் வீடியோக்கள் எந்தெந்த format களில்  வெவ்வேறு வலை உலாவிகளில் (Web browsers)இலகு பயன்பாட்டில் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலைஉலாவி
MP4
WebM
Ogg
Internet Explorer 9+
ஆம்
இல்லை
இல்லை
Chrome 6+
ஆம்
ஆம்
ஆம்
Firefox 3.6+
இல்லை
ஆம்
ஆம்
Safari 5+
ஆம்
இல்லை
இல்லை
Opera 10.6+
இல்லை
ஆம்
ஆம்

video support இற்கான html code பின்வருமாறு :


பின்வரும்அட்டவணையில்ஆடியோக்கள்எந்தெந்த format களில்  வெவ்வேறு வலை உலாவிகளில் (Web browsers)இலகு பயன்பாட்டில் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலைஉலாவி
MP3
Wav
Ogg
Internet Explorer 9+
ஆம்
இல்லை
இல்லை
Chrome 6+
ஆம்
ஆம்
ஆம்
Firefox 3.6+
இல்லை
ஆம்
ஆம்
Safari 5+
ஆம்
ஆம்
இல்லை
Opera 10+
இல்லை
ஆம்
ஆம்

audio support இற்கான html code பின்வருமாறு :


மிகையிணைப்புக்கள்(Hyper Links)
மிகையிணைப்புக்கள்( Hyperlinks ) எந்த வலைதளத்தினதும் தேவையாகஉள்ளது. மிகையிணைப்புக்கள்( Hyperlinks ) பிறவலைப்பக்கங்கள் இணைப்புகளை உடனடியாக உருவாக்கஉதவும்.  மிகையிணைப்புக்கள்( Hyperlinks ), இதனால் தாமதம் இல்லாமல் நீங்கள் மற்றவலைப்பக்கத்தை பார்வையிட உதவும்.

மிகைஇணைப்புகளை பயன்படுத்தி, நாம் எளிதில் விரைவாக நாம் ஒரு வலைத்தளத்தில்இருந்து தேவைப்படும் தகவல்களை காணலாம். இவ்

மிகை இணைப்புகள் நீல நிற கீழ் கோடிட பட்ட எழுத்துருக்களால் அடையாள 

படுத்தத பட்டிருக்கும்.கீழே உள்ள படம் சில உதாரணங்களை காட்டுகிறது.
 




 உள்ளடக்கங்களின்ஒழுங்கமைப்பு(Organization of Contents )

இணையதளபக்கங்களின் ஒழுங்கானஅமைப்புக்குஅமைப்பு (Content), பட்டியல் (Lists), அட்டவணை (Tables), சட்டஅமைப்புபட்டி (Frames)பற்றி அறிய வேண்டியது முக்கியமாகும்.

வடிவமைப்பு (Format)
வடிவமைப்பில் ஒரு வலைப்பக்கத்தின் பரிமாணங்கள் (உயரம்மற்றும்அகலம்) பற்றி கருதப்படுகின்றது .பயனாளர்களுக்கு ஏற்ப இவை வேறுபடலாம். பாவனையாளர் நோக்கம் அத்துடன் வலைதளத்தை அணுக பயன்படுத்தும்தொழில்நுட்பம், இணைப்புக்கள்  (மடிக்கணணி, டேப்லட், ஸ்மார்ட்போன்) ஐ பொறுத்தும் இவை வேறுபடலாம். உதாரணமாகவலைத்தளங்களில்அளவுகளை pixels இல் பின்வருமாறுகருதுகின்றனர்.

  • முகப்புத்தகம்- 980 பிக்சல்கள்
  • YouTube - 961 பிக்சல்கள்
  • யாஹூ - 973 பிக்சல்கள்
  • எம்எஸ்என் - 980 பிக்சல்கள்
  • ட்விட்டர் - 919 பிக்சல்கள் (பகுதிதிரவம்)
  • சென்டர் - 980 பிக்சல்கள்
  • பிங் - 970 பிக்சல்கள் (பகுதிதிரவம்)
  • Baidu- 900 பிக்சல்கள்
  • QQ - 974 பிக்சல்கள்.


ஒருதரமான வலைப்பக்கத்தின் வடிவமைப்பானது வழிநடத்துப்பட்டை(navigation bar), உள்ளடக்கதேர்வுபட்டை(content selection bar), காட்சி மற்றும் அடிக்குறிப்புபட்டை(display and footer bar) என்பவற்றை கொண்டுள்ளது.

சட்டங்கள்(Frames)
சட்டங்களை பயன்படுத்தி, வழிநடத்துப்பட்டை(navigation bar), உள்ளடக்கதேர்வுபட்டை(content selection bar), காட்சிமற்றும் அடிக்குறிப்புபட்டை(display and footer bar) என்பவை தனித்தனி பகுதியாகபிரிக்கப்பட்டிருக்கும்.அவ்வாறு செய்வதன்மூலம், இணைய தளத்தில் உள்ள அம்சங்களை பாவனையாளர் எளிதாக புரிந்து கொள்ளவும் முடியும். மேலும் சரியாக சட்டங்களை கையாளுதல் மூலம்,இணையத்தளத்தை பாவனையாளர் சிறந்த முறையில் கையாள கூடியதாய் இருக்கும். உதாரணங்கள் சில கீழேதரப்பட்டுள்ளன.



அட்டவணைகள்






பொதுவாக, சுருக்கமாக தெளிவாக தகவலை ஒரு பெரிய அளவு சித்தரிக்க, நாம் அட்டவணைகள் பயன்படுத்துகின்றோம் . வலைத்தளங்களில் உள்ள அட்டவணைகளை  பயன்படுத்தி பாவனையாளர் இன்னும் தெளிவாக தகவலை புரிந்துகொள்ள முடியும். இணையதளத்தில் முறையீடு செய்ய மேலும் அட்டவணைகள் பொருத்தமாக பயன்படுத்தி இதன் பாவனை  அதிகரித்துள்ளது.

பட்டியல்கள்
இது ஒரு குறிப்பிட்ட வரிசையில் தகவல் காண்பிக்க தேவையானதாகும் , நாங்கள் பட்டியல்கள் என்று இந்த நுட்பத்தை பயன்படுதிகின்றோம் . பட்டியல்கள் இரண்டு முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. வரிசைபடுதிய பட்டியல் (ordered lists)
2. வரிசையிலமையாத பட்டியல் (unordered lists)
இரண்டுக்குமான  முக்கிய வேறுபாடு பட்டியல்கள் வரிசையிலமையாத போது துணை பகுதிகளில் அடையாளம்,ரவைகள், நட்சத்திரங்கள், ஸ்டார் போன்றவை  பயன்படுத்துகிறது மற்றும் வரிசைப்படுத்திய பட்டியலில் இலக்கங்கள் பயன்படுகின்றது.












No comments