Community project by students of the Faculty of Information Technology, University of Moratuwa, Sri Lanka.

Friday, December 6, 2013

1.2 தரவுகளையும் தகவலையும் உருவாக்கவும் பரப்பவும் மற்றும் நிருவகிக்கவும் தேவையான தொழில்நுட்பத்தை ஆய்வோம்(The need of technology to create, disseminate and manage data and information)

3:09 AM

Share it Please

மனிதர்களாகிய நாம் தரவுகளையும் தகவல்களையும் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றோம். அதனை உருவாக்கவும், பரப்பவும் மற்றும் அதை நிருவகிக்கவும் நம் முன்னோர்கள் பல யுத்திகளை கையாண்டுள்ளனர்.

பெருந்தொகையான தரவுகளையும் தகவல்களையும் கையினால் கையாளும் முறைகளில் ஏற்படும் குறைபாடுகள்.


முன்னைய காலத்தில் தரவுகளைக் கையாள்வது மிக இலகுவான காரியமாக இருந்தது. ஏனெனில் அக்காலத்தில் தரவுகளினதும் தகவல்களினதும் அளவு மிகச் சிறியது. காலப்போக்கில் சேகரிக்க வேண்டிய தகவல்களின் அளவு  அதிகரிக்க அதிகரிக்க அத் தரவுகளை கையாளும் திறன் குறைந்து வந்தது. 
அத்துடன் அவற்றை சேகரிக்கும் வேகம்(Slowness)  அவற்றின் நம்பகத்தன்மை(Unreliability), மிகச்சரியின்மை(Inaccuracy) குறைந்து வந்தது. அத்துடன் அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பும் போது அவை தவறுவதற்கான வாய்ப்பும் அதிகம் காணப்பட்டது. தகவல்கள் அதிகமாகையால் அவற்றின் உண்மைத்தன்மையும் குறைவாகவே காணப்பட்டது.


IT யுகத்தின் தோற்றம்

தரவுகளையும், தகவல்களையும் சேமிப்பதிலும் பரிமாற்றம் செய்வதிலும் சிக்கல்கள் காணப்பட்டதால் மனிதன் தனது அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி அதற்கான தீர்வை கண்டுபிடிக்க முனைந்தான். அதற்காக இயந்திரங்களை கண்டு பிடித்தான். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதே கணினி ஆகும். இதற்கான கொள்கைகளை  Charles Babbage வெளியிட்டு பின்னர் 1837ல் முதல் கணினி இயந்திரத்தையும் கண்டு பிடித்தார். இதுவே தகவல் தொழில்நுட்பத்தின் ஆரம்ப காலம் ஆகும். கணினியின் கண்டுபிடிப்புக்கு பின் தகவல்ககளை சேமித்தலும் பரிமாறலும் இலகுவாக்கப்பட்டது.


அதன் பின் அமெரிக்க புள்ளிவிபரவியலாளர் ஹெர்மன் ஹோலேறித்(Herman Hollerith) மக்கள் தொகை கணக்கெடுக்கும் அலுவலகத்துக்காக Punch cardsஐ அடிப்படையாக கொண்ட அட்டவணைப்படுத்தும் இயந்திரம் ஒன்றை 1890ல்  கண்டுபிடித்தார். இது தகவல் சேமிப்பினை பன்மடங்கு வேகப்படுத்தியது. இவர் நிறுவிய Tabulating Machine Company காலப்போக்கில் IBM என பெயர் மாற்றப்பட்டது.

 Tabulating Machine

நாம் நாளாந்த வாழ்வில் பல்வேறுபட்ட தகவல்களை கையாள்கிறோம். அவற்றின் முக்கியத்துவத்தைப் பொறுத்து வெவ்வேறுபட்ட சேமிப்பகங்களில்(Storage) சேமிக்கின்றோம். ஆரம்பத்தில் Magnetic Tapeல் தரவுகளை சேமித்தோம். அதன் வினைத்திறன் பற்றாக்குறையினால் அதன்பின் வன்தட்டு(Hard disk), Floppy disk, இறுவெட்டு(CD), DVD, Micro SD card, Pen drive என வினைத்திறனுள்ள பல சேமிப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று அதன் உச்ச கட்டமாக Cloud storage பயன்பட்டு வருகின்றது. இவற்றின் மூலம் நாம் தகவல்களை பாதுகாப்பாகவும், வினைத்திறனுடனும் சேமிக்கலாம்.
Storage devices

கணினியின் வரலாறானது பாரிய தொழில்நுட்ப வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டது. முதல் தலைமுறையின் போது வெற்றுக் குழாய்கள்(Vacume tubes) பயன்படுத்தப்பட்டது. இந்தக் கணினியை வைத்திருப்பதற்கு ஒரு அறை முழுவதும் தேவைப்பட்டது. அத்துடன் அதைக் கையாள்வதும் அவற்றைப் பராமரிப்பதும் மிகக் கடினமாகக் காணப்பட்டது. அதன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட Transistor, Integrated Circuit, Micro processorகளால் அவற்றின் அளவு குறைந்து வந்து இன்று எம் உள்ளங்கையில் அடங்கிவிட்டது. இன்று நம் கையடக்க தொலைபேசிகளிலேயே தகவல்களையும், தரவுகளையும் சேமிக்கவும் அவற்றைப் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது. முன்னொரு காலத்தில் செல்வந்தர்களாலும், அலுவலகங்களிலும் மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்த இச் சாதனங்கள் இன்று சாதாரண மனிதனாலும் உபயோகிக்கப்படுவது தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைத்த அநுகூலமே ஆகும்.
First generation computer


தகவல் தொழில்நுட்பவியலையும் தொடர்பாடல் தொழில்நுட்பவியலையும் இணைதல்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1957 காலப்பகுதியில் தகவல் பரிமாற்றத்திலும் சேமிப்பிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்னர் கணினியானது ஒரு நேரத்தில் ஒரு வேலையே மட்டுமே செய்ய கூடியதாக  இருந்தது. இது Batch Processing எனப்பட்டது. இது அக் காலத்தில் வினைத்திறனாக இருந்தது. பின்னர் காலப்போக்கில் கணினியின் தேவைகள் அதிகரிக்க வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட வேலையின் பகுதிகளை செய்ய வேண்டியிருந்தது. அதன் போது ஒரு இடத்தில செய்யப் பட்ட வேலை கைகளால் மற்றைய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சரிபார்த்து இணைக்கப்பட்டது. இது உருவாக்குனர்களுக்கு(Developers) மிகவும் கடினமானதாகவும், நேரத்தை வீணாக்கும் செயலாகவும் இருந்தது. 1957ல் பாரிய தொழில்நுட்ப மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஒரு இடத்தில் இருந்தே இன்னொரு இடத்தில் இருக்கும் கணினியை இயக்கக்கூடியதாக இருந்தது(Remote Connection). அதேவேளை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடியதாகவும் இருந்தது(Time sharing).

1957ல் சோவியத் யூனியனால் Sputnik விண்கலம் ஏவப்பட்டது. அதற்குப் போட்டியாகவும் அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவும் அமெரிக்கா ARPA(Advance Research Projects Agency)ஐ உருவாக்கியது. அந்த நேரத்தில் தகவல்கள் மக்களினால் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. பிற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் தகவல்களை பரப்ப இணையம் பயன்பட்டது. இன்றைய இணையத்தின் வளர்ச்சிக்கு விஞ்ஞான(Scientific), இராணுவ(Military), மற்றும் வர்த்தக(Commercial) தேவைகளே அடிப்படையாகக் காணப்பட்டது. அதன் பின் 1960களில் ARPAnet உருவாக்கம் பெற்றது. இதுவே உலகின் முதல் Multiple-site computer network ஆகும். இதுவே இறுதியில் Internet ஆக மாறியது.

தகவல் பரிமாற்றத்தின் போது இரு கணினிகளுக்கிடையே TCP(Transmission Control Protocol)  எனும் நெறிமுறை(Protocol) பயன்படும். இது தகவல் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தும். இதன் போது தகவலானது சிறு சிறு துண்டுகளாக(Packets) பிரிக்கப்பட்டு அனுப்புனரினால்(Sender) அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பப்பட்ட சிறு சிறு துண்டுகள் பெறுனரினால்(Reciever) பெறப்பட்டு ஒன்று சேர்க்கப்படும். இதுவே Packet Switching எனப்படும். இப்படி Packets ஆக அனுப்புவதால் தகவல்கள் தவறவிடப்படும் வாய்ப்பு குறைவு.

தகவல் பரிமாற்றத்தின் போது ஊடகம் முக்கியமானதாகும். அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை கம்பி ஊடகத்தினால்(Wire medium) அனுப்பப்படும் தகவலே வேகமாகவும் வினைத்திறனுடனும் சென்றடையும். கம்பியில்லா ஊடகத்தினால்(Wireless medium) அனுப்பப்படும் தகவல் தவற விடப்படும் வீதம் அதிகமாகும். அத்துடன் குறுகிய தூரத்துக்கு மட்டுமே வினைத்திறனுடன் அனுப்பலாம். தூர பிரதேசங்களுக்கு அனுப்புவது கடினமாகும். Radio waves மூலம் தகவல்கள் அனுப்பப்படும் போது வளிமண்டல தாக்கங்களினால் தகவல் அனுப்புவதில் சிரமம் காணப்பட்டது. ஆகவே சிறிய சிறிய Network குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தகவல் அனுப்புதல் இலகுவானது.

Connecting Computers through Wire and Wireless medium

WWW ( World Wide Web) என்பது இணையம் மூலமாக தகவல்களை அணுகும் வழிமுறை ஆகும். இணையமானது HTTP நெறிமுறையை(Protocol) உபயோகிக்கிறது. இதுவே இணையத்தில் தகவல் பரிமாறப் பயன்படும் மொழி(language) ஆகும். இணையப் பக்கங்களைப்(Web pages)ஐ பார்வையிடுவதற்காக Internet Browsers பயன்படும். இன்று Google Chrome, Firefox போன்ற Browsers அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இணையத்தளத்தில் Graphics, Sounds, Text, Video போன்ற உள்ளடக்கங்கள் காணப்படும். முன்னொரு காலத்தில் கணினியில் மட்டுமே காணப்பட்ட இணைய பாவனை இன்று கையடக்கத் தொலைபேசி(phone), Tablet , Palmtop போன்ற உபகரணங்களிலும் காணப்படுகிறது. இத் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகின் எப் பாகத்திலிருந்தும் தகவல்களை அனுப்பவோ பெற்றுக்கொள்ளவோ முடியும். 
Web browsers


3 comments: