Community project by students of the Faculty of Information Technology, University of Moratuwa, Sri Lanka.

Monday, September 9, 2013

நிறுவனங்களின் பல்வேறு தேவைகளுக்காக ICT பயன்பாடு பற்றிய ஆய்வு(1.6 Investigates the use of ICT in different field of applications in organizations)

2:30 AM

Share it Please


தரவு மற்றும் தொடர்பாடல் துறைகளில் பயன்படுத்தும் எந்த ஒரு வியூகமும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாக கருதமுடியும். 
1. தரவுகளை store  செய்தல்.
2. store செய்த தரவுகளை மீள் உபயோகித்தல்.
3. தரவுகளை தேவைக்கு அமைய மாற்றியமைத்தல்.
4. தரவுகளை பரிமாற்றல்.
போன்றன ICT யின் முக்கிய செயல்பாடுகளாக கருதப்படுகின்றன.

   




           அக்கால நிறுவனங்கள்



                     
                                          



 நவீன நிறுவனங்கள்









தற்காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் ICT யை பயன்படுத்தி தமது வேலைகளை இலகுவாக செய்கின்றன. கணினி பயன்பாடு, இணையப் பயன்பாடு, தொலைபேசிப் பயன்பாடு இதன் மூலம் உயர் வருவாயை ஈட்டுவதோடு சிறந்த சேவையை வழங்குகின்றனர்.

உ+ம்- சில தசாப்தங்களுக்கு முன் நிறுவனங்கள் தகவல் பரிமாற்றதிற்கு தந்திகள் பயன்படுத்தின. உயர் செலவு, நேர விரயம் என்பன இதன் குறைபாடுகளாக கருத முடியும். ஆனால் தற்போது மின்னஞ்சல் மூலம் இக் குறைபாடுகள் இன்றி தொடர்பாடுகளை மேற்கொள்கின்றன.


பொதுவாக நிறுவனங்கள் ICTயை பின்வரும் தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர்.
தொடர்பாடல்
 - விளம்பரம்
 - பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்காக


தொடர்பாடலில் ICT    
1.    PRESENTATIONS(விளக்க காட்சிகள்)
Presentation என்பது பல பேர் முன்னிலையில் அறிக்கைப்படுத்தல். இதை கணினியை அல்லது வேறு ஊடகங்களை பயன்படுத்தி செய்ய முடியும். ஒரு விளக்க காட்சியை சிறப்பாக செய்ய நான்கு விடயங்ளை கருத்திற் கொள்ளவேண்டும்.
1.விடயம்
2.அமைப்பு
3.சிறந்த ஒழுங்கமைப்பு
4. வழங்குனர் மற்றும் அவதானிகள்





2.    TELECOMMUNICATION(தொலைத்தொடர்பு)
தொலைபேசி, தொலைகல், இணையம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அலுவலகதிற்கு அப்பால் இருந்து தகவல் பரிமாற்றம் செய்வது தொலைத்தொடர்பு எனப்படும்.

 3.Video conferencing

சில தொலைத்தொடர்பு நுட்பங்களை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இருவேறுப்பட்ட பௌதீக அமைவுகளில் இருந்து ஒளி மற்றும் ஒலி ஊடாக தொடர்பு கொள்வது வீடியோ கொன்ஃபெரெசிங்க்(video conferencing) எனப்படும். இது கூட்டங்களிலும், இலத்திரணியல் கல்வி, மற்றும் தொலைத்தொடர்பாடலிலும் பயன்படும். நேர முகாமைத்துவம், பண விரயத்தை தவிர்தல் என்பன இதன் நன்மைகள் ஆகும்.



தற்காலத்தில் தொலை மருத்துவம் அதாவது மருத்துவர் தன் வீட்டில் இருந்தே சிகிச்சை அளிக்கும் வசதியும் உண்டு.


4.விளம்பரத்தில் ICTயின் பயன்பாடு

நிறுவனங்கள் சந்தைப்படுத்தலில் ICT யை பயன்படுத்துகின்றன. மூன்று விதமான விளம்பரங்கள் உண்டு.
  - பொருள் விளம்பரம்
 - வியாபர நிறுவன விளம்பரம்
 - சேவை விளம்பரம


-பொருள் விளம்பரம்
ஒரு பொருளுக்கான விளம்பரம். இதில் கீழ் குறிப்பிட்ட படி முறைகள் உண்டு.
1.       - பொருளுக்குரிய தரப்பினரை இனங்காணல்.
2.        - விளம்பர முறையை இனங்கானல்
3.        - சரியான விளம்பர முறையை தெரிவு செய்தல்.


-வியாபர நிறுவன விளம்பரம்
ஒரு பொருளை விளம்பரப்படுத்தாது நிறுவனத்திற்கு விளம்பரம் செய்தல். பொருள் விளம்பரத்திற்கு உரிய படிமுரைகள் இதிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.




-சேவை விளம்பரம்
காப்புறுதி நிறுவனங்கள், வங்கிகள், அரசு துறை என்பனவற்றின் விளம்பரங்கள் சேவை விளம்பரத்திற்கு உதாரணங்கள் ஆகும்.


விளம்பரத் துறையில் ICT யின் பயன்பாடு

1.நிறுவனத்தின் நடவடிக்கைகளை வலைத்தளத்தில் பேண
2. மல்டிமீடியா PRESENTATION செய்ய
3.துண்டு பிரசுரம்(FLYERS) செய்ய
4.சுவரொட்டி வடிவமைக்க

கல்வி நடவடிக்கைகளுக்கு ICT யின் பயன்பாடு

1.COMPUTER BASED ASSESSMENT எனப்படும் பரீட்சை மதிப்பீட்டு முறை


2.கல்வி நடவடிக்கையில் படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகள் உபயோகிக்கலாம்.

2 comments: